No results found

    Google Tamil News | தேசிய கல்வி உதவித் தொகை- இணைய தளத்தில் விண்ணப்பிக்க 31ந் தேதி கடைசிநாள்


    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31 கடைசி நாளாகும். இந்த திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 8 ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் தொடர்ந்து கல்வியை தொடர்வதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தேசிய கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. கல்வியை தொடரவும், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இதற்கான தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது 7 ஆம் வகுப்பு தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியின மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.|

    Previous Next

    نموذج الاتصال