No results found

    குஜராத் மாநிலத்தில் அமையும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்- பிரதமர் மோடி ஆய்வு | Google Tamil News


    சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்று லோத்தல். தற்போது அது குஜராத் மாநிலத்தில் உள்ளது. இங்கு தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பங்கற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது: பழங்காலத்தில் இந்தியாவின் வர்த்தகமும், வணிகமும் உலகம் முழுவதும் பரவியிருந்தது. உலகின் ஒவ்வொரு நாகரீகத்துடனும் இந்தியாவிற்கு தொடர்பு இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த அடிமைத்தனம், நமது பாரம்பரியத்தை உடைத்தது மட்டுமின்றி நமது பாரம்பரியம் மற்றும் நமது திறமைகளிலிருந்து மாறுபட்டு வளரவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

    சிந்து சமவெளி நாகரீக காலத்தில் லோத்தல் மிகப் பெரிய வர்த்தக மையமாக இருந்தது மட்டுமின்றி, இந்தியாவின், கடல்சார் ஆற்றலுக்கும், வளத்திற்கும் அடையாளமாக இருந்தது. லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ஆசி இந்தப் பகுதிக்கு இருந்தது. லோத்தல் துறைமுகத்தில் அக்காலத்தில் 84 நாடுகளின் கொடிகள் பறந்துள்ளது. வல்லபி என்பது 80 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. தற்போது லோத்தலில் அமைக்கப்படும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்தியாவின் பன்முக கடல்சார் வரலாற்றை கற்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான மையமாக செயல்படும். சாமானிய மக்களும் எளிதாக இந்திய வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த வளாகம் அமைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில்,குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், மத்திய மந்திரிகள் மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனாவால் ஆகியோர் பங்கேற்றனர்.

    Previous Next

    نموذج الاتصال