No results found

    இமாச்சல் சட்டசபை தேர்தல் - 46 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் | Google Tamil News


    இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி 46 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.

    Previous Next

    نموذج الاتصال