No results found

    வரும் 25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை | Google Tamil News


    தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். கிரகண உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال