சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சூடான் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் நூதன முறையில் பசை வடிவிலான தங்கத்தையும், தங்கக் கட்டியும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த பயணியிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Tamil News | சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- ஒருவர் கைது
Tamil News