கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் மு.ஸ்டாலின் முதுகு வலியால் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 2 மணி நேரம் நடைபெற்ற பரிசோதனைக்கு பின்னர், முதலமைச்சர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான உடற் பரிசோதனை நடைபெற்றதாகவும், முதுகு வலிக்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Tamil News | மருத்துமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி பரிசோதனை
Tamil News