மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு 2 நாள் மாநாடு அரியானாவில் உள்ள சுராஜ்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது. மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுத காவல் படை மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சுதந்திர தின உரையின்போது பிரதமர் அறிவித்த 5 உறுதிமொழிகளின்படி உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் புதிய கொள்கையை உருவாக்குவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. காவல் படையை நவீனமயமாக்குதல், இணையதள குற்ற மேலாண்மை, குற்றவியல் நீதி வழங்கும் முறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை, கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை மருந்து கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும். கூட்டாட்சி அடிப்படையிலும், மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை இந்த 2 நாள் மாநாடு அதிகரிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி நாளை இந்த மாநாட்டில் காணொலி மூலம் உரை நிகழ்த்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Tamil News | மாநில உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு- அரியானாவில் இன்று தொடக்கம்
Tamil News