கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மேம்படுத்தப்பட்ட நுண்கதிர் நிறுவனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்ப்பாக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து விதமான ஸ்கேன்களும் எடுக்கப்படுகின்றன. 2014-ல் இங்கு பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டது. மார்பக கட்டிகள் சாதாரணமானவையா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய மருந்து செலுத்தி எடுக்கப்படும் மார்பக நுண்கதிர் படத்தில், கட்டி எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவைப் பொறுத்து பிரித்து அறிய ஏ-1 மூலமாக சிறுநீரக கற்களை சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறியும் மென்பொருளை உருவாக்கி பரிசோதனை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் நம் அண்டை மாநிலங்களின் நோயாளிகளுக்கும் உடனுக்குடன் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மேம்படுத்தப்பட்ட நுண்கதிர் பிரிவு- அமைச்சர் தொடங்கி வைத்தார்
Tamil News