இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலை இயக்கியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "ஐஎன்எஸ் விக்ராந்தின் தொலைநோக்கை நனவாக்கிய இந்திய கடற்படை, கடற்படை வடிவமைப்பு பணியகம் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வாழ்த்துக்கள். நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை" என்று குறிப்பிட்டவர் விமானம் தாங்கி கப்பலின் படத்தையும் பகிர்ந்துள்ளார்
நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை- ராகுல் காந்தி
Tamil News