சென்னையில் விநாயகர் சதுர்த்திவிழா 31- ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் விநாயகர் சிலைகளை பூஜை செய்து வழிபட்டனர். சென்னையில் வீடுகளில் பூஜை செய்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைப்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்கிறார்கள். இன்று 2-வது நாளாக சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கரைத்து விட்டு சென்றனர். நாளை (சனி) ,ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இந்த நிலையில் வீடுகளில் பூஜை செய்து வழிபட்ட சிறிய வகை களிமண் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்ல முடியாதவர்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் மற்றும் மரத்தடி பகுதிகளில் விட்டு செல்கிறார்கள். சென்னையில் உள்ள பெரும்பாலான கோவில் வளாக மரத்தடி பகுதிகள் முழுவதும் விநாயகர் சிலைகள் நிறைந்து காணப்பட்டு வருகின்றன. இந்த விநாயகர் சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் மொத்தமாக சேகரித்து லாரிகள் மூலம் ஏற்றி சென்று கடலில் கரைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வீடுகளில் பூஜை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோவில் மரத்தடியில் விட்டுச்சென்ற மக்கள்
Tamil News