முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அமலாக்கத் துறையை பா.ஜ.க. அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தி வருகிறது. I.N.D.I.A.வில் உள்ள யாரும் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை . இந்தியா என்ற சொல் பாஜகவினருக்கு பிடிக்காமல் ஆகிவிட்டது. இந்தியா வெல்லும். அதை 2024 சொல்லும். ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதை காண முடிகிறது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் 'பாகிஸ்தானுக்குப் போ' என மதவாத சிந்தனையுடன் பேசியவர்கள், இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என தெரியவில்லை. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது பிளாக் காமெடி எனப்படும் வேடிக்கையான வேதனை என தெரிவித்துள்ளார்.