கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 12-வது ஓசூர் புத்தக கண்காட்சி ஓசூர் ஹீல்ஸ் ஓட்டல் வளாகத்தில், வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. மாணவ, மாணவிகள் இளைஞர்கள் புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்த புத்தக கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இதில் 100 அரங்குகளில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், சிறந்த படைப்பாளர்களின் புத்தகம், நாவல்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்கி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கிராமப்புற நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.