No results found

    கலைஞர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்களை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு- கலெக்டர் தகவல்


    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும். மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உத்திரமேரூர் திருப்பெரும்புதூர், குன்றத்தூர், ஆகிய வட்டாசியர் அலுவலகங்கள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகங்களில், மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பொது விநியாக நியாயவிலைக் கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும். விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் விவரங்கள் வருமாறு:- மாவட்ட கலெக்டர் அலுவலகம்-044 27237107, 044-27237207, காஞ்சிபுரம் வட்டம்-044-27222776, வாலாஜாபாத் வட்டம்-044-27256090, உத்திரமேரூர் வட்டம்-044-27272230, திருப்பெரும்புதூர் வட்டம்-044-27162231, குன்றத்தூர் வட்டம்-044-24780449. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال