No results found

    அமலோற்பவம் பள்ளியில் தேசிய அளவிலான செஸ் போட்டி


    அகில இந்திய செஸ் பெடரேஷன், புதுச்சேரி செஸ் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குட் பட்டோர் பிரிவில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா முதலிடமும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு புதுச்சேரி செஸ் அசோசி யேஷன் சங்கத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந் தினர்களாக வைத்திலிங்கம் எம்.பி., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். முன்னதாக பொருளாளர் வரதராசு வரவேற்றார். முடிவில் துணைச்செய–லாளர் அழகுமணி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்றவர் மாணவர்கள் கஜகஸ்தானில் ஆகஸ்ட்டு மாதம் நடைபெறும் உலக போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال