No results found

    கனிமவள கடத்தலில் அமைச்சர்கள் தொடர்பு?- விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு


    மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வர வேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال