No results found

    அபரஞ்சி தங்கத்திலான கள்ளழகர் சிலை


    சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை நோக்கி வருகிறார். இவ்வாறு வரும் கள்ளழகர் உற்சவ சிலை மிகவும் அரிய வகை அபரஞ்சி என்னும் தங்கத்திலான சிலை ஆகும். இந்த அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம் என்பதால் கள்ளழகரும் தேவலோக பெருமாளாக வணங்குகிறார்கள். உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் 2 இடங்களில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று கள்ளழகர் உற்சவர் சிலையாகும். மற்றொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி சுவாமி கோவிலில் உள்ள சிலையாகும். அழகர் விக்ரகத்துக்கு கோவிலின் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال