கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவகுமாருக்கும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்நாடகாவின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு டுவீட் செய்துள்ளார்.
முதல்வர், துணை முதல்வராக பதவியேற்க இருக்கும் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு பசவராஜ் பொம்மை வாழ்த்து
Tamil News