No results found

    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்- இன்று பதவியேற்பு


    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது. மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து, இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலத்தை 34 ஆக உயர்த்தும். உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال