No results found

    'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது: சரத்பவார் பேட்டி


    மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா. ஆனால் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் இதை அழிக்கும் நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்து உள்ளது. 'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது. பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை எனில் அதற்காக எதையும் செய்யும் பா.ஜனதாவின் கொள்கை ஆபத்தானது. அது அதிகார மோதலை அதிகரிக்கிறது. பா.ஜனதா மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை உடைத்து மராட்டியம், கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. கர்நாடகத்தில் தேசியவாத காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தான் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال