No results found

    மோக்கா புயல் கரையை கடந்தது- 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்


    தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான 'மோக்கா' புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் போர்ட் பிளேயரில் இருந்து 530 கி.மீ. மேற்கு- வடமேற்கே நிலை கொண்டிருந்தது. மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அதிதீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதே கடற்கரைகளை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிதீவிர புயலாக இருக்கும் மோக்கா இன்னும் 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியது. தற்போது, மோக்கா புயல் சிட்வேக்கு வடக்கே சுமார் 40 கி.மீ., தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு தென்கிழக்கே 145 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال