No results found

    தோஹா டைமண்ட் லீக்- ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா


    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال