1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும். 2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும் 3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.
4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. 5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.
6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது. 7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.