No results found

    திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம்


    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை தீபாராதனையை தொடர்ந்து திருவாதிரைக்களி, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இதே கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணசாமி சன்னதியில் புதிதாக கமுகுமரம் நாட்டப்பட்டு அதில் கொடிமர பூஜைகள் நடந்தது. பூஜைகளைத்தொடர்ந்து தந்திரி சஜித் சங்கரநாராயணரு கருடன் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை கொடிமரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடந்தது.

    Previous Next

    نموذج الاتصال