No results found

    கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை குருத்தோலை பவனி


    ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை "குருத்து ஞாயிறு" நாளாக கடைப் பிடிக்கப்படும். அதன்படி நாளை (2-ந்தேதி) காலை அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெறும். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஜெருச லேம் நகரில் இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தி சிறுவர், சிறுமியரும் பெரியோர்களும் பவனியாக தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்" என்று ஆர்ப்பரித்து வந்தனர்.

    அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், குருத்தோலை பவனி நடத்தப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு திருப்பலியுடன் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமை (6-ந்தேதி) புனித வியாழன் ஆக கடைப்பிடிக்கப்படும். இது இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நாள் ஆகும். இயேசு கிறிஸ்து 12 சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆலயத்திலும் அன்றைய சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களை கழுவுவார்கள். அன்றைய திருப்பலி முடியும் போது, திவ்விய நற்கருணை பவனியாக எடுத்துச்செல்லப் பட்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் மாற்று பீடத்தில் வைக்கப்படும். பிறகு நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடைபெறும்.

    மறுநாள் புனிதவெள்ளி அன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு திருச்சடங்குகள் ஆரம்பமாகும். பங்குத்தந்தை சிவப்பு நிற திருப்பலி உடை அணிந்து, ஆலய தலைவாசலில் இருந்து பவனியாக வந்து 1 நிமிடம் பீடத்தின் முன் முகம் குப்புற படுத்திருப்பார். பின்னர் எழுந்து பீடத்திற்கு செல்வார். பிறகு இறைவார்த்தை வழிபாடும், தொடர்ந்து விசுவாசிகள் மன்றாட்டும் நடைபெறும். தொடர்ந்து 'திருச்சிலுவை முத்தம் செய்யும்' புனிதமான நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நடைபெறும். வரும் 8-ந்தேதி (சனிக்கி ழமை) இரவு 11 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடும். திருமுழுக்கு வழிபாடும், புனிதர்களின் மன்றாட்டு மாலையும், திருமுழுக்கு வாக்குறுதிகள் புதுப் பித்தலும், விசுவாசிகள் மன்றாட்டும், நற்கருணை வழிபாடும், தொடர்ந்து உயிர்ப்பு பெருவிழா நள் ளிரவு சிறப்பு திருப்பலியும் நடைபெறும். 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    Previous Next

    نموذج الاتصال