பொதுவாக சிவாலயங்களில் நந்தி முன், பின் கால்களை மடக்கி படுத்த கோலத்தில் இருக்கும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்திதேவர் செப்பு திருமேனியாக தியாகராஜர் எதிரில் நின்று கொண்டிருக்கிறார். கமலாம்பிகை சன்னதி இதற்கு காரணம் சுந்தரருக்காக தூது சென்ற பெருமான் அவசரத்தில் நந்தி மேல் அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்து சென்றார். இனி பெருமானை நடக்க விடக்கூடாது அவர் புறப்படும் போது சுமந்து செல்ல தானும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் எழுந்து நின்ற நிலையில் நந்தி தேவர் காட்சி அளிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்ற உடன் முதலில் இடது பக்கம் உள்ள வீதி விடங்க விநாயகரை வணங்க வேண்டும். பிரம்ம நந்தி வீதி விடங்க விநாயகருக்கு பின்பு உள்ளார்.
ஆழித்தேரோட்டம் இவர் கண் கண்ட தெய்வம். திருவாரூர் தியாகராஜர் கோவில் அசலேஸ்வரர் சன்னதியில் நீர் நிரப்பி வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம். தியாகராஜா் கோவில் வடக்கே கமலாம்பிகை சன்னதி உள்ளது. இதைப்போல சண்முகர், சரஸ்வதி, பிரம்மலிங்கம், வசிட்டலிங்கம், அத்திரிலிங்கம், பரத்வாஜலிங்கம், ரவுத்திர துர்க்கை சன்னதிகள் உள்ளன. விமானத்தின் கீழ் மூலஸ்தானம் இருக்க வேண்டும். ஆனால் தியாகேசர் உற்சவரானதால் சற்று தள்ளி உள்மண்டபத்தில் உள்ளார். தீராத நோய், கடன்தொல்லை போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுவிக்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.