ஐ.பி.எல். போட்டியில் 7 ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் மெட்ரோ ரெயில் இலவசமாக செல்லலாம். இலவச பயணம் மேற்கொள்ள சி.எஸ்.கே. விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டை கையில் வைத்திருக்க வேண்டும். டிக்கெட்டில் உள்ள க்யூ ஆர் பார் கோடு மூலம் மெட்ரோ ரெயிலில் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் அரசினர் தோட்டம் ரெயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்துக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர போட்டிகள் நடக்கும் நாட்களில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை 1½ மணி நேரம் கூடுதலாக இயக்கப்படும். மேலும் வடபழனி சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐ.பி.எல். போட்டி பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக 1 மணி நேரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3 (நாளை) 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது.