No results found

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 20-ந்தேதி நடக்கிறது


    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறாா்கள். திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி, இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது என்றும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال