சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 70 இடங்களில் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. இங்கும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சுமார் 300 அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வரி தொடர்பான விவரங்களையும், வரவு-செலவு கணக்கு தகவல்களை பெறுவதற்கும் அந்நிறுவனத்தின் ஆடிட்டரை அழைக்க முடிவு செய்தனர். பெங்களூருவில் வசிக்கும் அவரை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறையினர் அழைத்துள்ளனர். விசாரணைக்காக ஆடிட்டர் ஒரு சில நாட்களில் சென்னை வந்து வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது. இன்று 2-வது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 70-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் இன்று 2-வது நாளாக சோதனை: ஆடிட்டர் ஆஜராக அழைப்பு?
Tamil News