No results found

    தீப்பெட்டியில் அடங்கக்கூடிய புடவை- பத்மாவதி தாயாருக்கு பக்தர் வழங்கினார்


    தெலுங்கானா மாநிலம், சிரிசில்லாஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ நல்ல விஜய் என்ற பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கும், திருமலை திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் பட்டு புடவை தானமாக வழங்கினார். அவர் பத்மாவதி தாயாருக்கு வழங்கிய புடவை தீப்பெட்டியில் அடங்கக்கூடிய வகையில் உள்ளது. மேலும் ரூ.45 ஆயிரம் மதிப்பில் 5 கிராம் எடையுள்ள தங்க சரிகை புடவையையும் வழங்கினார். ஸ்ரீபத்மாவதி ஓய்வு இல்லத்தில் தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி முன்னிலையில் வழங்கினார். திருப்பதியில் நேற்று 86,129 பேர் தரிசனம் செய்தனர். 28,094 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Previous Next

    نموذج الاتصال