No results found

    குருவாயூர் கோவிலில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்த முடிவு


    கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருமணம் செய்ய வருவார்கள். ஒரு நாளில் 250 திருமணங்கள் வரை நடந்துள்ளது. இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும். முகூர்த்த நாட்களில் இங்கு அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும். அதற்குள் திருமணங்களை நடத்தி முடித்துவிட மணமக்களின் பெற்றோர் நினைப்பதால் கோவிலில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண கோவில் நிர்வாகம் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் கோவில் தந்திரிகளிடம் கருத்து கேட்டபின்பு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال