No results found

    வேலை, தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் சொல்லுங்க...


    நமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய பகவானை தினந்தோறும் போற்றினர். நாம் அனைவருமே வாழ்வதற்காக பல வேலைகளை செய்கிறோம். அவற்றில் வேலையிடங்களில் பலருக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம் இதோ. ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம் ஓம் பூர் புவ ஸூவஹா அக்னயே ஜாதவேத இஹாவஹா சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தின் சிறப்பான பலனை பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசை தினத்தில் சுத்தமான விளக்கேற்றி, அதற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து உங்கள் குரு, குலதெய்வம் ஆகியோர்களை மானசீகமாக வணங்கி 1008 முறை இம்மந்திரம் துதித்து உரு ஜெபிக்க வேலை, தொழில், வியாபார இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமைய பெற்றவர்கள் நன்மையான பலன்களை பெறுவார்கள், நெருப்பினால் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.

    பஞ்சபூதங்களில் ஒன்றானதும், இறைத்தன்மை உடையதாகவும் கருதப்படுவது நெருப்பு ஆகும். இந்த நெருப்பை வேத காலங்களில் அக்னி பகவானாக நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீங்கி, நன்மையான சக்திகள் அங்கு நிறையவே அக்காலங்களில் யாகங்கள் அதிகம் செய்து அக்னி பகவானின் அருளாசிகள் பெற்றனர். அக்னி தன்மையை கொண்ட சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

    Previous Next

    نموذج الاتصال