கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.3,539 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் இது 80 சதவீதம் உயர்வாகும். 640 மில்லியன் பயணிகள் கடந்த ஆண்டில் பயணம் செய்துள்ளனர். அதாவது 5,240 கோடி மக்கள் கடந்த நிதியாண்டில் பயணித்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 88.5 சதவீதம் அதிகமாகும். 339.6 மில்லியன் கோடி பேர் பயணம் செய்த நிலையில் தற்போது முடிந்த நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதே போல 2022-23-ம் ஆண்டில் தெற்கு ரெயில்வே 37.94 மில்லியன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.3637.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில் விபத்து இல்லா பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2037 கி.மீ. தூரம் ரெயில் பாதை வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 44 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதே போல தெற்கு ரெயில்வேயில் 178 கி.மீ. தூரத்திற்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 52 கி.மீ. தூரம் அகலப்பாதையாக மாற்றும் திட்டம், 126 கி.மீ. தூரத்திற்கு இரட்டைப் பாதை பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. டிக்கெட் பரிசோதனை மூலம் மட்டும் ரூ.115 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.