No results found

    நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவு ரத்து- மத்திய அமைச்சர் அறிவிப்பு


    காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டுவிட் செய்துள்ளார். முன்னதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் டெல்லியில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال