2014 முதல் இந்தியா புதுவேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. அரசியல் கலாசாரத்தை பா.ஜனதா மாற்றாது. ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியே எங்கள் நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜனதா விரும்புவதில்லை. இலவச ரேசன் திட்டம், உடல்நலக் காப்பீடு மற்றும் மற்ற நலத்திட்டங்களை பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. சமூக நீதியே எங்களுக்கு முக்கியம். ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது. இதே போல சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்து கொள்வோம். எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்து உள்ளனர். ஆனால் நாங்கள் மக்கள் பணிக்காக பாடுபடுகிறோம் எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியாது. சிறிய சாதனைகளில் திருப்தி அடைகின்றன.
பெரிய கனவு காண்பதிலும், இன்னும் பெரிய இலக்குகளை அடைவதிலும் பா.ஜனதா நம்பிக்கை கொண்டுள்ளது. 370-வது சட்ட பிரிவு என்றாவது ஒருநாள் வரலாறாக மாறும். எதிர்க்கட்சிகள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பா.ஜனதா செய்து வரும் பணியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று அவநம்பிக்கை அடைந்து உள்ளனர். பா.ஜனதா குறித்து தவறான பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். ஆனால் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சதியும், பொய் பிரசாரமும் எடுபடாது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும், சமூக ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் பா.ஜனதாவினருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.