நாளை பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி 4 இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களுக்கு அவர் செல்வதாக இருந்தது. இதில் மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலேயே நடப்பதாக இருந்தது. பிரதமர் மோடியும் அங்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடமும் சிறியதாக உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்துக்கு பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம்
Tamil News