No results found

    கர்நாடக வேட்பாளர் பட்டியல்- அமித்ஷா, ஜே.பி.நட்டாவை அண்ணாமலை இன்று சந்திக்கிறார்


    கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை பா.ஜனதா, காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக சந்திக்கின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை 2 கட்டங்களாக வெளியிட்டுள்ளது. ஒரு கட்டமாக 100 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும், 2-வது கட்டமாக 42 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி விட்டது. அதே போல் பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார். பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு ஓட்டலில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அவர்களிடம் கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை காண்பித்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார். அமித்ஷா, ஜே.பி.நட்டா இருவரையும் இன்று பிற்பகலில் அண்ணாமலை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் தான் அண்ணாமலை அவசரமாக இன்று பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுடன் டெல்லிக்கு சென்றுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال