No results found

    71000 பேருக்கு மத்திய அரசு பணி ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி


    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இதுவரை 3 கட்டங்களாக சுமார் 2.18 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறிய அவர், துறைமுகத் துறை மற்றும் சுகாதாரத் துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றார். விவசாயத் துறையில் பண்ணை இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    Previous Next

    نموذج الاتصال