நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சருக்கு வழங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன். நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. நானும் டெல்டாகாரன் தான், நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
நானும் டெல்டாகாரன் தான்- நிலக்கரி சுரங்க கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்
Tamil News