No results found

    கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு தகவல்


    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், "ஈரோடு-கோபி நான்கு வழி சாலை நிறைவடைந்து உள்ளது. நாளுக்குநாள் பெருகி வரக்கூடிய போக்கு வரத்து நெரிசல் காரணமாக கோபிசெட்டிபாளையத்தில் புறவழி சாலை அமைப்பதற்கு கடந்த அரசு ஆய்வு மேற்கொண்டது. தி.மு.க. அரசும் செய்து தருவதாக உறுதி அளித்தது. எப்போது பணி தொடங்கப்படும்" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- கோபி செட்டிபாளையத்தை நன்கு அறிந்தவன் நான். மேலும் பல திரைப்படங்கள் அங்கு எடுக்கப்படுகிறது. நானும் திரைப்படம் தயாரிப்பதற்காக அங்கே மாதக்கணக்கில் தங்கி இருந்த அனுபவம் உண்டு, அதனால் அந்த ஊரின் நிலை என்ன என்பது எனக்கு நன்கு தெரியும்.

    கடந்த ஆட்சியில் புறவழிச் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. கோபிக்கு புறவழிச்சாலை வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்போது அரசின் நிதிநிலை என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது. ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கக்கூடிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சாலை, புற வழிச்சாலை பற்றி கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை கோபிக்கு முன்னுரிமை அளித்து முதலமைச்சருடன் கலந்து பேசி புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال