No results found

    எதையும் சந்திக்க அமைச்சர்கள் தயாராக உள்ளனர்- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி


    புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال