No results found

    கர்நாடக தேர்தல் - முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார்


    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி சிக்காவி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஷிகான் தொகுதியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். மனு தாக்கலின் போது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Previous Next

    نموذج الاتصال