திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த மாணவிகள் பாலியல் புகார் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. மாணவிகள் ஆன்லைனில் புகார் அளிக்க இணைய தள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்கனவே கலாஷேத்ரா பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தியது. பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் பாலியல் சம்பவம் குறித்து குழுவினருக்கு கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்த குழுவினர் பள்ளியில் விசாரணை நடத்துகின்றனர்.
மாணவிகள் பாலியல் புகார்- கலாஷேத்ராவில் 3 பேர் கொண்ட குழு இன்று மீண்டும் விசாரணை
Tamil News