No results found

    ஐபிஎல் டி20- சேப்பாக்கத்தில் வரும் 12ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்


    ஐபிஎல் தொடர் வருகிற 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் கடந்த 3ம் தேதி நடந்த லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். அடுத்ததாக சென்னையில் வருகிற 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال