No results found

    ஐகோர்ட்டில் 10-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை


    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் வருகிற 10-ந்தேதி முதல் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் வருகிற 10-ந்தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்-லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும். இதன்மூலம், கோர்ட்டு அறை மற்றும் வளாகத்தில் மனிதர்களின் நடமாட்டத்தை குறைத்து, கொரோனா பரவலை தடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதியை வக்கீல்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும் வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال