No results found

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்துமூவர் திருவிழாவை காண திரண்ட பக்தர்கள்


    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது. பிற்பகலில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலே குவிய தொடங்கினார்கள். சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர். கோவிலின் முன் பகுதியிலும், உள்ளேயும் பக்தர்கள் கூடினார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதனை பக்தர்கள் வணங்கினார்கள். பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர். மாலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வடம் பிடித்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு மாலையில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பங்குனி திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கி தானமாக வழங்கினார்கள்.

    Previous Next

    نموذج الاتصال