No results found

    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்


    'ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும்' என்பன போன்ற பல கருத்துகளை மருத்துவர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரண்டு பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் இரண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال