No results found

    ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக கிரிமினல் குற்றச்சாட்டு- டிரம்ப் கைதாவாரா?


    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி பாலியல் புகார்களில் சிக்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. அவருக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். 76 வயதான டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் முறையற்ற உறவை வைத்து இருந்தார். தன்னுடன் சில ஆண்டுகள் டிரம்ப் பாலியல் உறவு வைத்து இருந்ததாக ஆபாச நடிகை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புத்தகத்திலும் இடம் பெற்று இருந்தது. அந்த சமயம் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    இதையடுத்து இதனை மறைப்பதற்காக தேர்தல் பிரசாரநிதியில் இருந்து டிரம்ப் அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த பணம் சட்ட விரோதமாக கொடுக்கப் பட்டதாக வழக்கு தொடரப் பட்டது. இந்த பிரச்சினைகளால் அவர் அதிபர் தேர்தலிலும் தோல்வியை தழுவினார். இந்த வழக்கு மான்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் உள்ளது. இதில் டிரம்பின் முன்னாள் வக்கீல் ஒருவர் அவருக்கு எதிராக சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் குற்றத்தை மறைத்ததற்காக எழுந்த புகாரின் பேரில் நியூயார்க் நடுவன் மன்றம் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அதிபராக இருந்த ஒருவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டிரம்ப் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் டிரம்ப் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் அமெரிக்காவில் நிலவுகிறது. இதற்கிடையில் வருகிற செவ்வாய்க்கிழமை டிரம்ப் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال