No results found

    வாட்ஸ்அப்-ல் வலம் வரும் மத்திய அரசின் இலவச ரீசார்ஜ் சலுகை - உண்மை என்ன தெரியுமா?


    ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டதை போன்றே இதன் மூலம் ஏற்படும் அபாயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகள் மக்களை ஏமாற்றுவதோடு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடவும் செய்கின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 239-க்கு இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச ரீசார்ஜ் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், "நான் எனக்கான 28 நாட்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெற்றுக் கொண்டேன், நீங்களும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜை கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 30," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என PIB தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு இவ்வாறு எந்த விதமான இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال