No results found

    தமிழகத்தில் 8 நகரங்கள் உள்பட 22 நகரங்கள் அடுத்த மாதம் 'ஸ்மார்ட் சிட்டி'களாக தரம் உயரும்- பணிகள் முடியும் தருவாயை எட்டியது


    இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி, அகமதாபாத், சென்னை, கோவை உள்பட 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள், சுற்றுப்புற சூழல், மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்படும். முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர் ஆகிய 8 நகரங்கள் மற்றும் போபால், இந்தூர், வாரணாசி, ஆக்ரா உள்பட 22 நகரங்களின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தமாதம் (ஏப்ரல்) இந்த 22 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 322 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 804 பணிகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 5,246 பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற இதுவரை ரூ.36,447 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ரூ.32,095 கோடி செலவிட்டு 88 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    Previous Next

    نموذج الاتصال