தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வருகை தந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து நட்டா பேசியதாவது:- தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக ஆட்சி. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். ஜம்மு- காஷ்மீர், உத்தர பிரதேசம் தொடங்கி தமிழகம் வரை மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. இவ்வாறு அவர் பேசினார்.
மாநில கட்சிகள் தோன்றியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்... பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து ஜே.பி. நட்டா பேச்சு
Tamil News